கடைகளை திறக்காத 245 பேர் சஸ்பெண்ட் | TASMAC | TN Govt | Tasmac Protest | Liquor Shop Closed காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் பணியில் தங்களை ஈடுபடுத்துவதை கைவிட வலியுறுத்தி நேற்று முன்தினம் கடைகளை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்திய நிலையில்,சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. 1,300 கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று 2ம் நாளாக 655 கடைகளை திறக்காமல் ஊழியர்கள் ஸ்ட்ரைக் செய்தனர். திறந்திருந்த கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர். கடைகள் திறக்கப்படாத விவகாரத்தில் 1,731 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 245 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் கிராக்கி ஏற்பட்டதால் பாட்டிலுக்கு 70 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக மது பிரியர்கள் புகார் தெரிவித்தனர். காலி பாட்டில் கையாளுதல் கட்டணமாக நாள் ஒன்றுக்கு 750 முதல் 2,000 வரை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டணம் கடை அமைந்துள்ள இடம், தினசரி விற்பனை அளவு ஆகியவற்றை கணக்கிட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் ஊரில் டாஸ்மாக் முன் வரிசை கட்டி நின்ற கூட்டத்தை வீடியோ வெளியிட்டு செய்து நெட்டிசன்கள் விவாதமாக்கி உள்ளனர். அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மது கடைகளை திறக்க வேண்டும். ஊழியர்களை போராட்டத்துக்கு துாண்டுவோர் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். #TASMAC | #TNGovt | #TasmacProtest | #LiquorShopClosed
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

அதை மட்டும் ஏத்துக்க மாட்டாங்க !
தர்மபுரி • 3 hour(s) ago