மூன்று தென்கொரிய வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 1,614 கோடி ரூபாய் முதலீடுகளை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திரா கையெழுத்திட்டுள்ளது. ஹூண்டாய் மற்றும் கியா கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் ஹவாஷின், செயோன் மற்றும் ஐவாமெட் ஆகிய மூன்று கொரிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளன. ஆந்திர அரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, அனந்தபூர் மாவட்டத்தில் இந்த புதிய உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஹவாஷின் நிறுவனம் 850 கோடி ரூபாயும், செயோன் நிறுவனம் 514 கோடி ரூபாயும், ஐவாமெட் நிறுவனம் 250 கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த திட்டங்களின் மூலம் அனந்தபூர் பகுதியில் கிட்டத்தட்ட 1,418 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும். அப்பகுதி, வாகன உதிரிபாக தயாரிப்பு மையமாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் வினியோக தொடரில் உள்ள கொரிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தென் மாநிலங்களுக்கு இடையே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழகம் ஏற்கனவே கொரிய நிறுவனங்களின் முக்கிய முதலீட்டு மையமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், கொரிய நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்வது தமிழகத்துக்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. #TamilNadu #AndhraPradesh #Hyundai #Kia #SouthKorea #ForeignInvestment #Anantapur #AutomotiveIndustry #EconomicPolicy #BusinessNews #TamilNaduNews #CurrentAffairs #NewsUpdates #India #StateEconomy
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

முதல்வர் ஆகணும்னா ஆட்டம் போடணும் தலைவரே!
விருதுநகர் • 2 minutes ago