பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக நாகர்கோவிலுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. தொப்பூர் - முத்தம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள மலைப்பாதையில் சென்றபோது, பயங்கர சத்தத்துடன் ராட்சத பாறை ஒன்று உருண்டு ரயில் மீது விழுந்தது. இன்ஜினுக்கு அடுத்த உள்ள ஜெனரல் கம்பார்ட்மெண்ட்-டின் பக்கவாட்டில் விழுந்து மோதியது. அதிகாலை 5 மணியளவில் தூக்கத்தில் இருந்த பயணிகள் திடுக்கிட்டு விழித்தனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பாறை மோதியதில் சேதமடைந்த ரயிலின் சக்கரத்தை சரிசெய்து ஊழியர்கள் பாறையை அப்புறப்படுத்தினர். மண் அரிப்பு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்தது தெரியவந்துள்ளது. அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. #Dharmapuri #Bengaluru train #Rock_roll_down #landslide #train_damage #Muthampatti #trainwheel_damaged #Passengertrain #Train_accident #Heavy_rain #Trainnews #Tamilnadunews #Currentaffairs
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

ஆரோக்கியம் • 50 minutes ago

உணவு • 45 minutes ago

உலகம் • 1 hour(s) ago

அக்கம் பக்கம் • 1 hour(s) ago

தகவல் சுரங்கம் • 1 hour(s) ago

பிற விளையாட்டு • 1 hour(s) ago

இந்தியா • 59 minutes ago

உலகம் • 1 hour(s) ago