இந்தியா முழுதும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவில் இந்த பண்டிகை பிரபலம். மும்பையின் ஒவ்வொரு பகுதியிலும் விநாயகர் சிலைகள் பெரிய அளவில் நிறுவப்பட்டு பூஜைகள் நடக்கும். இதில், கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள். மும்பையில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று, விநாயகருக்கு பூஜை செய்தார். மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வெவ்வேறு இடங்களில் பங்கேற்றனர். டில்லியிலும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிர கவர்னராக முன்னர் பதவி வகித்தார். எனவே டில்லியில் மஹாராஷ்டிர அரசின் விருந்தினர் மாளிகையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று பூஜை செய்தார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய பா.ஜ., அமைச்சர் பீயூஷ் கோயலின் வீட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், துணை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார். விநாயகர் சதுர்த்தி போல நவராத்திரி நேரத்தில் மேற்கு வங்கத்தில் துர்க்கை பூஜை பிரபலம். டில்லியில் பெங்காலிகள் அதிகம் வசிக்கும் சித்தரஞ்சன் பார்க் பகுதியில், துர்க்கை சிலைகள் வைத்து பெரிய பந்தல் அமைத்து கொண்டாடுவார்கள். அனைத்து கட்சி தலைவர்களும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றாலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் இந்த இரண்டு விழாக்களிலும் எப்போதுமே பங்கேற்பதில்லை. பல ஆண்டுகளாக இவர்கள் இந்த பண்டிகைகளை ஒதுக்கி வந்தாலும் தற்போது சோனியா குடும்பம் பங்கேற்காதது பேசு பொருளாகி வருகிறது. #RahulGandhi #PriyankaGandhi #GaneshChaturthi #Congress #BJP #NationalPolitics #DelhiPolitics #GaneshFestival #PoliticalControversy #IndianPolitics #Dinamalar #TNNews #PoliticalNews
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தகவல் சுரங்கம் • 1 hour(s) ago
கரூர் • 1 hour(s) ago

கிரிக்கெட் • 1 hour(s) ago
கரூர் • 2 hour(s) ago

தமிழகம் • 20 minutes ago

அக்கம் பக்கம் • 1 hour(s) ago

பிற விளையாட்டு • 1 hour(s) ago

கரூர் • 1 hour(s) ago