பொள்ளாச்சியை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் விவேகானந்த். அமெரிக்காவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய இவர், வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் பலனாக, தேங்காய் தண்ணீரில் உள்ள மருத்துவக் குணங்களுடன், தேங்காய் எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோனோ லாரின் (Monolaurin) அமிலத்தை சேர்த்து கோகோ சீல் என்ற மருந்தை கண்டுபிடித்தார். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ஆறாத புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது. இந்த மருந்தை தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்த மத்திய அரசு சான்றிதழ் வழங்கிய நிலையில், தமிழகத்தில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். #Kovai #Pollachi #CoconutWaterInnovation #MedicalInnovation #CocoSeal #DiabetesCare #WoundHealing #JIPMER #StartupIndia #MakeInIndia #TamilNaduNews #TNMSC #AgriTech #Monolaurin #DinamalarNews
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்தியா • 8 minutes ago
விழுப்புரம் • 59 minutes ago

பிற விளையாட்டு • 54 minutes ago

பிற விளையாட்டு • 51 minutes ago
சென்னை • 38 minutes ago

இந்தியா • 23 minutes ago

சென்னை • 2 minutes ago

கிரிக்கெட் • 53 minutes ago