தமிழகத்தில் த.வெ.க அரசு அமைந்த பின், நிர்வாக ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு துறைகளில் ஒரே இடத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்கள் பற்றிய, முழு விபரங்களையும் சேகரித்து, வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட பல பணியிடங்கள் இதில் அடக்கம். இது தொடர்பாக, அரசு துறைகளின் தலைமை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்று, வேறு இடங்களுக்கு சென்ற சில ஊழியர்கள், சில நாட்களிலேயே பழைய இடத்திற்கே திரும்பி விடுகின்றனர். பதவி உயர்வில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பழைய பணி இடத்திற்கே திரும்பி வந்தவர்கள் யார்? அவர்கள் எப்போது திரும்பினார்கள்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். இது மிகவும் அவசரமானது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் நீண்ட காலம் ஒரே இடத்தில் பணியில் இருப்பதால், ஒப்பந்ததாரர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. இதனால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. அதை தடுக்கும் வகையில், நீண்ட கால ஊழியர்களை இடமாற்றம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக அரசு துறைகளின் நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க விரும்புகிறது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள், இந்த நடவடிக்கைக்கு எதிராக திரும்பியுள்ளனர். #GovernmentEmployees #TNGovernment #AdministrativeReforms #StaffTransfer #TamilNaduNews #TNGovtOrders #TNNews #Dinamalar #CorruptionFree #TNGovtService #PublicAdministration #TNGovtUpdates #GovernmentStaff
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelரசிகர்கள் எழுப்பும் கோஷம் எங்கயோ இடிக்குதே...!
கரூர் • 19 minutes ago