செப்டம்பர் 23, 24ம் தேதிகளில் டில்லியில் சிந்தனை அமர்வு எனப்படும், சிந்தன் சிவிர் என்கிற ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் பிரதமர் மோடி. அனைத்து துறை மத்திய அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். சுய முன்னேற்றம், மக்களுடன் தொடர்பு, நிர்வாகம் ஆகியவை குறித்து இங்கு அலசப்படும். அமைச்சர்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், அமைச்சகங்களிடையே ஒருங்கிணைப்பு என, பல விஷயங்கள் குறித்து பிரதமர் பேசுவார். பள்ளியில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் மார்க் அடங்கிய, ப்ரோகரஸ் ரிப்போர்ட் போல அமைச்சர்களின் ரிப்போர்ட்கள் பிரதமருக்கு அளிக்கப்படும். எனவே, இந்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் என, கடந்த 6 மாதங்களாக செய்திகள் அடிபட்டும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், அமைச்சரவை மாற்றப்படலாம் என பேசப்படுகிறது. பல அமைச்சர்கள் தங்கள் பதவி பறிபோகுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர். அமைச்சரவை மாற்றம் நடக்குமா? நடக்காதா என்பது இருவருக்கு மட்டுமே தெரியும். ஒருவர் பிரதமர், மற்றொருவர் அமித் ஷா என்கின்றனர் பா.ஜ.,வினர். #UnionMinisters #CabinetReshuffle #DelhiPolitics #BJP #PMModi #CentralGovernment #NDAGovernment #PoliticalAnalysis #DelhiNews #NationalNews #Dinamalar #DinamalarPremium #IndianPolitics #TNNews #PoliticalUpdates
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மதுரை • 6 minutes ago

அறிவியல் ஆயிரம் • 1 hour(s) ago

பிற விளையாட்டு • 1 hour(s) ago

இந்தியா • 1 minutes ago
மதுரை • 6 minutes ago

கிரிக்கெட் • 1 hour(s) ago

மதுரை • 8 minutes ago

அக்கம் பக்கம் • 1 hour(s) ago