தி.மு.க., கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ், இப்போது முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., கூட்டணியில் இணைந்துவிட்டது. இரண்டு அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டது. அந்த கோபத்தில் உள்ள தி.மு.க., தலைமை, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., எம்.பி., கனி மொழி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தாவை சந்தித்து, தி.மு.க., திட்டம் குறித்து கனிமொழி எடுத்துரைத்தார். அத்துடன், தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் தி.மு.க.,வின் ஆதரவு அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அப்படி அமைக்கப்படும் கூட்டணிக்கான தலைமை பொறுப்பை, நீங்களே ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

அறிவியல் ஆயிரம் • 1 hour(s) ago

கரூர் • 4 hour(s) ago

கிரிக்கெட் • 1 hour(s) ago

பிற விளையாட்டு • 1 hour(s) ago

இது உங்கள் இடம் • 1 hour(s) ago

தமிழகம் • 2 minutes ago

அக்கம் பக்கம் • 1 hour(s) ago

உலகம் • 41 minutes ago