அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட 40 பேரும், தாராபுரத்தில் 39 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இரு தொகுதிகளிலும் த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க, நா.த.க, கம்யூனிஸ்ட் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வேட்புமனுவை வாபஸ் வாங்க கடைசி நாள் முடிந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கட்சி சார்பில் 10 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 17 பேர் என 27 பேர் போட்டியில் உள்ளனர். தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமன், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன் ஆகியோர் களத்தில் உள்ளனர். 28 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அதில், ஒரு சுயேட்சை வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதேபோல, தாராபுரத்தில் 22 பேர் போட்டியில் உள்ளனர். தவெக வேட்பாளர் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். #ByElection #Dharapuram #Madurandhagam #ElectionCommission #CandidateListFinal #Voting #Elections2023 #PoliticalCampaign #CivicEngagement #DemocracyInAction #VoterAwareness #BallotBox #Candidates #ElectionDay #Polls #PoliticalDialogue #CommunityVoice #YourVoteMatters #EngageInDemocracy
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கிருஷ்ணகிரி • 2 minutes ago

இந்தியா • 18 minutes ago

திருச்சி • 3 minutes ago
கோயம்புத்தூர் • 3 minutes ago

தமிழகம் • 11 minutes ago
சென்னை • 5 minutes ago
சென்னை • 2 minutes ago

விருதுநகர் • 1 minute ago