பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் CBSE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய தடகளப் போட்டிகள் கடந்த 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் ஓசூர் அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியின் ப்ளஸ் 2 மாணவி மான்சி பங்கேற்றார். அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை வெறும் 25.12 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு 25.61 வினாடிகளில் கடந்து நிகழ்த்தப்பட்டு இருந்த முந்தைய சாதனையை அவர் முறியடித்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய சாதனையை படைத்தார் வெற்றி வீராங்கனை மான்சி. அவருக்கு பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelKarthika.வை விட Best Players போட்டு உடைத்தCoach Kavitha
புதுச்சேரி • 6 minutes ago