தடகளத்தில் மோதிய பள்ளி அணிகள்! Udumalpet Athletics |PNP Memorial Rolling Trophy உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், பி.என்.பி. நினைவு சுழற்கோப்பைக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடுமலை, கருமத்தம்பட்டி, நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் முதல் நாளில், தடகளப் போட்டிகளுக்காக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன ஓடுதளம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் நாளில் நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், இரும்புக் குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல், தொடர் ஓட்டம், இடைமாற்று ஓட்டப்பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பிடித்த அணிகளுக்கு தலா 7 புள்ளிகளும், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு தலா 5 புள்ளிகளும், மூன்றாம் இடம் பிடித்த அணிகளுக்கு தலா 3 புள்ளிகளும் வழங்கப்பட்டன. அனைத்துப் போட்டிகளிலும் பெற்ற புள்ளிகள் கணக்கிடப்பட்டு, மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்ற பள்ளிக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelதமிழக கபடி Players.க்கு Coach Alex Pandiyan அறிவுரை

திருப்பூர் • 06-Oct-2026