கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து அரங்கில், மாநில அளவிலான முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் 10 நாட்களாக நடைபெற்றன. கல்லூரி மாணவர்கள் பிரிவில் கோவை அணி முதலிடத்தையும், செங்கல்பட்டு அணி இரண்டாவது இடத்தையும், சென்னை அணி மூன்றாவது இடத்தையும், திண்டுக்கல் அணி நான்காவது இடத்தையும் பிடித்தன. மாணவியர் பிரிவில் செங்கல்பட்டு அணி முதலிடத்தையும், சென்னை அணி இரண்டாவது இடத்தையும், கோவை அணி மூன்றாவது இடத்தையும், காஞ்சிபுரம் அணி நான்காவது இடத்தையும் பிடித்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளை கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelKarthika.வை விட Best Players போட்டு உடைத்தCoach Kavitha

திண்டுக்கல் • 26-Sep-2026