சேலம், திருவள்ளூர் அணிகள் அசத்தல் வெற்றி | Coimbatore | State-Level Kho-Kho Tournament | Salem, Tiruvallur Teams won மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கோகோ போட்டிகள் கற்பகம் பல்கலையில் கடந்த 20ம்தேதி தொடங்கி, 25ம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், விருதுநகர் அணி 14-12 என்ற புள்ளியுடன் சேலம் அணியையும், திருவள்ளூர் அணி 18-7 புள்ளியுடன் நீலகிரி அணியையும் வென்றன. நேற்று கரூர் அணி 17-16 புள்ளியுடன் திண்டுக்கல் அணியையும், கோவை அணி 11-10 புள்ளியுடன் தஞ்சாவூர் அணியையும், ஈரோடு அணி 12-3 புள்ளியுடன் பெரம்பலுார் அணியையும், தருமபுரி அணி 11-9 புள்ளியுடன் திருவாரூர் அணியையும் வென்றன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelதமிழக கபடி Players.க்கு Coach Alex Pandiyan அறிவுரை
கோயம்புத்தூர் • 28-Sep-2026