தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில் 52 வது சப் ஜூனியர் மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 20 முதல் 22ம் தேதி வரை கன்னியாகுமரியில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட சப் - ஜூனியர் சிறுவர் அணிக்கான தேர்வு போட்டி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 141 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளை திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகச் செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் துவக்கி வைத்தார். நடுவர் குழுத் தலைவர் முத்துசாமி வரவேற்றார். கபடிக் கழக PRO சிவபாலன், நிர்வாகிகள் ஆறுச்சாமி, ரோலக்ஸ் சுப்ரமணியம், ருத்ரன் முன்னிலை வகித்தனர். விளையாட்டுத் திறமை அடிப்படையில் 25 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டது. இவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கபடிக் கழகம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelKarthika.வை விட Best Players போட்டு உடைத்தCoach Kavitha
தர்மபுரி • 33 minutes ago