திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Football Tournament | School Education Department | Tiruppur திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான மாணவியர் கால்பந்து போட்டியில் 14 அணிகளை சேர்ந்த, 252 வீராங்கனையர் பங்கேற்று அசத்தினர். நவம்பர் முதல் வாரம் நடக்கவுள்ள மாநில கால்பந்து போட்டிக்கு செல்லும் திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவியர் அணியை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து மாவட்ட கால்பந்து போட்டி திருப்பூர் கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. இப்போட்டியில் பதிநான்கு மற்றும், 17 வயது பிரிவில் தலா ஏழு அணிகள் வீதம், 252 வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டியை பள்ளி முதல்வர் சின்னையன், ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் தண்டபாணி ஆகியோர் துவக்கி வைத்தனர். பதிநான்கு வயது பிரிவு இறுதி போட்டிக்கு மைக்ரோ கிட்ஸ் - பெதப்பம்பட்டி என்.வி. மெட்ரிக் பள்ளி அணிகள் தகுதி பெற்றன. பதினேழு வயது பிரிவு முதல் அரையிறுதி போட்டிக்கு மைக்ரோ கிட்ஸ் - தாராபுரம் செயின்ட் ஆலோசியஸ் பள்ளி அணியும், மற்றொரு அரையிறுதி போட்டிக்கு திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி - பெதப்பம்பட்டி என்.வி. மெட்ரிக் பள்ளி அணியும் தகுதி பெற்றன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelKarthika.வை விட Best Players போட்டு உடைத்தCoach Kavitha
திருப்பூர் • 7 minutes ago