தென்மண்டல அளவில் எஸ்பி அபிஷேக் குப்தா அசத்தல் | Sivanagai SP Abhishek Gupta Won | Senior Police Officers Shooting Competition | Madurai தெற்கு மண்டல போலீஸ் சார்பில் அக்டோபர் 12 மற்றும் 13ல் மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில் தென் மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. போட்டியில் 2 கூடுதல் எஸ்பிக்கள் மற்றும் 14 எஎஸ்பி மற்றும் டிஎஸ்பிக்கள், போலீசார் பங்கேற்றனர். 9 மில்லிமீட்டர் பிஸ்டல் மற்றும் .380 ரிவால்வர் பிரிவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோட்ட டிஎஸ்பி அனில் குமார் முதலிடமும், சிவகங்கை எஸ்பி அபிஷேக் குப்தா 2ம் இடமும், திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் 3ம் பிடித்தனர். 5.56 மில்லிமீட்டர் இன்சாஸ் துப்பாக்கிப் பிரிவில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உட்கோட்ட டிஎஸ்பி விஷ்ணு பிரியா முதலிடமும் , திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் 2ம் இடமும், சிவகங்கை எஸ்பி அபிஷேக் குப்தா 3ம் இடமும் பிடித்தனர். 2 பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட சிவகங்கை எஸ்பி அபிஷேக் குப்தா ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelதமிழக கபடி Players.க்கு Coach Alex Pandiyan அறிவுரை
மதுரை • 4 minutes ago