1239 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports| Champion| senior citizen| Athletics| Tiruppur திருப்பூர் அவிநாசி ஸ்ரீ நாச்சம்மாள் வித்யாவாணி பள்ளியில் 17வது திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகளப் போட்டி நடந்தது திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜராஜன் தேசியக் கொடி ஏற்றி போட்டிகளைத் துவக்கி வைத்தார். போட்டியில் மொத்தம் 1239 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 30 வயதிற்கு மேற்பட்டோர், முதல் 80 வயதிற்கு மேற்பட்டோர் வரை 11 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. நடைப்போட்டி, ஓட்டப்பந்தயம் , தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், சங்கிலிக்குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தத்தித் தாண்டுதல், கோலூன்றித் தாண்டுதல் உள்ளிட்ட பல போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது . மாவட்ட போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கோயம்புத்தூர் • 2 minutes ago