குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, பனஸ்கந்தாவில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கான நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். விவசாயிகள் நலன், கிராமப்புற மேம்பாடு, கால்நடை இனப்பெருக்கம், பால் உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்டவற்றிற்கான பல்வேறு நவீன தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்தார். நவராத்திரிக்குப் பின், அம்பாஜி தேவியின் அருளாசி பெற்றதில் மகிழ்ச்சி. குஜராத் வந்ததில் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளேன். விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கான நலத்திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போரால், நமக்கான எரிபொருள் கிடைக்காமல் போகும் என, சிலர் மக்களை அச்சுறுத்தினர். வதந்திகளை பரப்பினர். ஆனால், மக்களுக்கு எவ்வித துன்பமும் நிகழாமல் அரசு நடவடிக்கை எடுத்தது. பனஸ்கந்தாவில் விளையும் உருளைக்கிழங்கு உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ளவர்களுக்கு உருளையை தங்கமாக மாற்றும் வித்தையை யாரும் கற்றுத்தரத் தேவையில்லை. அது ஏற்கனவே அவர்களுக்குத் தெரியும். கடந்த 25 ஆண்டுகளாக குஜராத் முதல்வர், நாட்டின் பிரதமர் என்ற வகையில், நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றும் வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு நன்றி. என் இறுதி மூச்சு உள்ள வரை மக்கள் பணி செய்வேன் என பிரதமர் மோடி பேசினார்.
subramanian31-Oct-2026
ஆண்டவன் அருள் கிடைக்கும்

இந்தியா • 30-Oct-2026
இந்தியா • 1 minutes ago

கடலூர் • 01-Oct-2026
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்