உத்தராகண்ட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலில் தரிசனம் முடித்து, கர்நாடகாவை சேர்ந்த 5 பக்தர்கள், தனியார் நிறுவன ஹெலிகாப்டரில் டேராடூன் நோக்கி பயணித்தனர். ஹெலிகாப்டர் சமோலி மாவட்டத்தை கடந்த போது, தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுடனான தொடர்பை இழந்ததால், அதன் நிலை என்ன ஆனது எனத் தெரியமால் பதற்றம் ஏற்பட்டது. ஹெலிகாப்டரை டிராக் செய்ய தொடர்ந்து முயற்சித்த நிலையில், இன்று மதியம் ஜோஷிமத் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கி பறந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த கர்நாடகாவை சேர்ந்த, ஆண் பயணிகள் 5 பேர் மற்றும் பைலட் ஒருவர் என அதில் இருந்த ஆறு பேரும் பலியானதாக, சமோலி போலீஸ் எஸ்பி சுர்ஜித் சிங் உறுதிப்படுத்தி உள்ளார். உயிரிழந்தவர்களில் கர்நாடகாவை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் என்பவரும் ஒருவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உத்தராண்ட்டில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
subramanian30-Oct-2026
ஓம் சாந்தி
விருதுநகர் • 2 minutes ago
இந்தியா • 30-Oct-2026

பெங்களூரு • 30-Oct-2026

திருப்பூர் • 7 minutes ago

திருப்பூர் • 7 minutes ago

பெங்களூரு • 30-Sep-2026
இந்தியா • 1 minutes ago
கோயம்புத்தூர் • 2 minutes ago