வெவ்வேறு சிறைகளில் அடைக்க திட்டம்! | Theni Jail | Prisoners Escape தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 26ம் தேதி இரவு 17 கைதிகள் தப்பினர். 36 மணி நேரத்துக்குள் தப்பியோடிய 17 கைதிகளையும் தனிப்படை மடக்கி பிடித்தது. 27ம் தேதி 5 , 28 அன்று 8 கைதிகள் என 13 பேர் ஆண்டிபட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பாசில் முகம்மது உத்தரவிட்டார். எஞ்சிய 4 கைதிகளும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நவம்பர் 12 தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைதிகள் இப்போதைக்கு தேனி சிறையில் அடைக்கப்பட்டு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர். சிறைச்சாலையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு பணி போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தேனி • 28-Oct-2026
இந்தியா • 1 minutes ago

நீலகிரி • 2 minutes ago
தேனி • 29-Oct-2026

திருப்பூர் • 7 minutes ago
புதுச்சேரி • 26-Oct-2026

தமிழகம் • 28-Oct-2026

தமிழகம் • 27-Oct-2026