700க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| sports| Athletics| Championship| Covai கோவை பாரதியார் பல்கலையில் புறநகர் குறுமைய தடகளப் போட்டிகள் நடந்தது கல்வித்துறை சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் , மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தது. ஐம்பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 17 வயதிற்குட்பட்ட மாணவியர் 1500 மீட்டர் ஓட்டத்தில் ஹேமா சந்தோஷினி, மகாலட்சுமி மற்றும் காவியா முதல் மூன்று இடம் வென்றனர் 3000 மீட்டர் ஓட்டத்தில் சௌந்தர்யா, மகாலட்சுமி மற்றும் எலினா வெற்றி பெற்றனர். 100 மீட்டர் தடை தாண்டுதலில் ராஷ்மிகா, தன்ஷிகா மற்றும் அஷ்மிதா முதல் மூன்று இடங்கள் பிடித்தனர் மும்முறை தாண்டுதலில் கல்கி, வர்த்திகா, ஜெஸ்பர் வெற்றி பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 1800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிஷோர் குமார், கிர்லேஷ்குமார் மற்றும் சஞ்சய் தர்ஷன் வெற்றி பெற்றனர். 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிஷோர் குமார், கிர்லேஷ் குமார் மற்றும் காந்திராஜ் வென்றனர். குறுமைய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட போட்டியில் பங்கேற்பர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelManchester United - League Champions EPL Transfers, Strength& Weakness
கடலூர் • 7 minutes ago