முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறு | CM Cup Open Football Tournament | Covai முதல்வர் கோப்பைக்கான ஓப்பன் பிரிவு கால்பந்து போட்டி கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடந்தது. போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கால்பந்து பயிற்சியாளர் சவுமியா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். அரையிறுதி போட்டியில் ஆடிய பிச்சனூர் புட்பால் கிளப் மற்றும் 5 ஸ்குரூ அகாடமி (five sguru) அணிகள் மோதியது. இதில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் 5- ஸ்குரூ அகடாமி அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் கிக்கானி அகாடமியுடன், 5-ஸ்குரூ அணி விளையாடியதில் டை பிரேக்கர் முறையில் கிக்கானி அகாடமி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelManchester United - League Champions EPL Transfers, Strength& Weakness
விருதுநகர் • 14 minutes ago