கோவையில் ஆ குறுமைய தடகளப் போட்டிகள் தொடங்கியது Athletics |Athletics Meet |School Sports கோவை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் ஆ குறுமைய தடகளப் போட்டிகள் இன்று தொடங்கின. இந்தப் போட்டிகளில் 37 பள்ளிகளைச் சேர்ந்த 932 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடக்க விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகராட்சி கல்வி அலுவலர் பொறுப்பு குணசேகரன் வரவேற்றார். மாணவிகளுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் 17 வயது பிரிவில் சுசித்ராவும், 19 வயது பிரிவில் ஸ்ரேயா செல்வதுரையும் முதலிடம் பிடித்தனர். மாணவர்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் 17 வயது பிரிவில் பிரகதீஸும், 19 வயது பிரிவில் தரணீஷும் முதலிடம் பிடித்தனர். தடகளப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். #Athletics #AthleticsMeet #SchoolSports #TrackAndField #SportsMeet #StudentAthletes #TamilNaduSports #SchoolAthletics #SportsNews #TamilNews #TamilNaduNews #SportsUpdate
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelManchester United - League Champions EPL Transfers, Strength& Weakness
தமிழகம் • 1 hour(s) ago