போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்த மாணவர்கள் | Tiruppur | District Athletics Competition | Thrilling Matches Underway மாவட்ட தடகள சங்கம் சார்பில், 8வது திருப்பூர் மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் சாம்பியன்ஷிப் தடகளப்போட்டிகள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் 2 நாட்கள் நடக்கிறது போட்டிகளை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். பெஸ்ட் கார்ப்பரேஷன் இயக்குனர் ஆதித்யா ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் இளங்கோவன், திருப்பூர் மாவட்ட தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார், உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் விளையாட்டு உறுதி மொழியும், போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதல் நாள் 10, 12 மற்றும் 14 வயது குட்பட்டோர் பிரிவு ஆண்கள், பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என 24 போட்டிகள் நடைபெற்றது
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelManchester United - League Champions EPL Transfers, Strength& Weakness
சென்னை • 13 minutes ago