குடல் நல்லா இருந்தா உடல் நல்லா இருக்கும்! கோவையில் கோட்டக்கல் ஆயுர்வேத கருத்தரங்கம்! டைட்டில்: கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் 63வது ஆயுர்வேத கருத்தரங்கம் கோவையில் கோலகலம் #KottakkalAryaVaidyasala #KottakkalSeminar #CoimbatoreKottakkalBranch #KottakkalGoldenJubilee #AyurvedaDoctorsMeet #Kottakkal #Kerala கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் 63வது ஆயுர்வேத கருத்தரங்கம், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. தூதபாபேஷ்வர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் ஆனந்த் கருத்தரங்கை துவக்கி வைத்தார். தமிழக அரசின், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் பாலசுப்ரணியம் சிறப்பு விருந்தினராக இதில் பங்கேற்றார். கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையின் தலைமை மருத்துவரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் பி.எம். வாரியர் வரவேற்புரை ஆற்றினார். பத்ம பூஷன் டாக்டர் பி.கே. வாரியர் நினைவாக நடந்த இந்த கருத்தரங்கில், குடல் ஆரோக்கியம், மருத்துவத்தின் முக்கியத்துவம், ஆயுர்வேதம் ஒரு பார்வை, நவீன அணுகுமுறைகள் ஆகிய தலைப்புகளில் டாக்டர்கள் உரையாற்றினர். கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை சார்பில் ஆயுர்வேதம் தொடர்பான 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மருத்துவத்துறையில் சிறந்த பங்களிப்பாற்றிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை கோவை கிளையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, இந்த ஆண்டு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றதாக டாக்டர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஒரு பவுனுக்கு ₹2,000 தள்ளுபடி... Legend Saravana Stores-ன் தீபாவளி ஆஃபர்!
சிவகங்கை • 9 minutes ago