கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வாக்குவாதம் | PAP, Amaravathi Irrigation Project | Water Theft | Farmers Alligation | RDO Inquiry | Udumalpet | Tiruppur திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடந்தது. இதில் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் பேசுகையில், குறை தீர் கூட்ட மனுக்களுக்கு, அலுவலர்கள் தீர்வு காண்பதில்லை. பயன்பாட்டில் இருந்த ரோட்டில், கோமங்கலம்புதுாரில் சுங்கச்சாவடி அமைத்து, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். விதிப்படி, 20 கி.மீ., சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும். பல போராட்டங்கள் நடத்தியும், தீர்வு இல்லை. திருமூர்த்திநகரில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய கட்டடம் கட்டவில்லை. ஆண்டியகவுண்டனுார் விவசாய நிலத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் அரசு அறிவித்தபடி, கடன் தள்ளுபடி செய்யாமல் உள்ளன.ர் மறு கடனும் வழங்கவில்லை என ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தனர். கோட்டாட்சியர் குமார் பேசுகையில், பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத் திட்டத்தில், முறைகேடாக நீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கூட்டுக் கண்காணிப்புக் குழு அமைக்கவும், அதில் விருப்பம் உள்ள விவசாயிகளை இணைக்கவும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். விவசாயிகளிடம் பேசி, பட்டியல் தருமாறு நீர்வளத்துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேரடியாக எந்த நபரையும் சேர்க்கவில்லை. துார்வாரும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், கால்வாய் கரை பகுதியில் உள்ள கழிவுகள், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, துாய்மையாகப் பராமரிக்க நீர் வளத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை
கள்ளக்குறிச்சி • 28-Oct-2026