டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு, டாடா டிரஸ்ட்டின் புதிய தலைவராக நோயல் டாடா பொறுப்பேற்றார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட் சுமார் 66 சதவிகிதம் பங்குகளைக் கொண்டுள்ளது. அதே போல டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் உள்ளார். 63 வயதாகும் அவர் டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 10 ஆண்டு காலம் தலைவராகவும் உள்ளார். இந்த பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20 ல் முடிவடைய உள்ளது. இந்த பதவியில் தொடர விரும்பவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இதனையடுத்து புதிய தலைவரை தேடும் பணியில் டாடா சன்ஸ் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் இந்த பதவியில் தொடர மும்பையில் நடந்த டாடா சன்ஸ் வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான அதிகார மோதல்களுக்கு இடையே இந்த முடிவு எடுக்கப்பட்டது என டாடா நிறுவன வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால் நோயல் டாடாவுக்கும், சந்திரசேகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. சந்திரசேகரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக பிப்ரவரியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நோயல் டாடா ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒருமனதான ஆதரவு இல்லாததால், டாடா குழுமத்தின் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு சந்திரசேகரன் தனது பதவி விலகலை அறிவித்தார். இனி டாடா தலைவராக பணியில் தொடர விரும்பவில்லை கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் மற்றும் பல டாடா குழும நிறுவனங்களுக்கும் தலைவராக பணியாற்றுவதால், அவரது விலகல் டாடா நிறுவனத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. மொத்தத்தில் சந்திரசேகரன் பதவி விலகல் அறிவிப்பு வெளியான அரை மணி நேரத்தில் டாடா குழும பங்குகளின் மதிப்பு 86,000 கோடி வீழ்ச்சி கண்டன. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் விதிபடி, மிகப்பெரிய வங்கிசாரா நிதி நிறுவனமான (டாடா சன்ஸ் கட்டாயம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்கிற சிக்கலும் வந்தது. இதில் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டத்துக்கு, நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில், பட்டியலிடும் யோசனைக்கு மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ரத்தன் டாடா அறக்கட்டளை அறங்காவலராக தன் மகன் நெவில் டாடாவை நியமிக்க நோயல் டாடா மேற்கொண்ட முயற்சிக்கும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. டாடா குழுமத்தில் கருத்து வேறுபாடு விவகாரம், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு தீவிரமடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில், நோயல் டாடா, சந்திரசேகரன், வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர் டேரியஸ் கம்பட்டா ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். இதையடுத்து பலகட்ட சுமூக பேச்சுக்கு பின் சந்திரசேகரன் மீண்டும் டாடா தலைவராக பதவியில் நீடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டாடா சன்ஸ் நிறுவுனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவும் ஒப்புத#TataSons #NChandrasekaran #TataGroup #BusinessNews #RatanTata #NoelTata #IndianBusiness #CorporateNews #StockMarketIndia #IPO #TataSonsIPO #BusinessUpdates #IndianEconomy #TataTrusts #LeadershipNewsல் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஎதிரியே தெரியாமல் தோற்றது திமுக!

இந்தியா • 31-Aug-2026