அடங்காத கலவரம் ஐரோப்பாவில் பதற்றம் பிரான்சில் 700 பேர் கைது டைட்டில்: பிரான்சில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: வன்முறையாக மாறிய போராட்டம் France Protest | Paris Fight | EuropeanUnion #Macron #Netherlands #Italy #Germany ஐரோப்பிய நாடான பிரான்சில், விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யக் கோரியும், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பல துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் ஜென்-ஸி இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து மூன்றவாது வாராமாக தொடரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர். அரசுக்கு எதிரான பதாகைகளுடன் பேரணி சென்றனர். அவர்களில் சிலர், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதால், போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைடுத்து, போராட்டக்காரர்கள், போலீசாரை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீச, அது அங்கிருந்த போலீசின் காலில் பட்டு, தீப்பற்றியது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டும் கூட்டத்தை கலையச் செய்தனர். பிரான்ஸ் முழுதும் பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கலவரமாக மாற்றிய 770 பேர் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் காவல்துறை அதிகாரிகள் கூறினர். போர்ச்சுகல், அல்பேனியா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் அரசுக்கு எதிரான இளைஞர் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், ஐரோப்பா முழுதும் பதற்றம் நீடிக்கிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகரையை கடக்கும் 'முரசு'! மிரட்டும் கடல் சீற்றம்
இந்தியா • 1 minutes ago