மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், வரும் அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளத. அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய, பிற மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். ஆனால், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பணியாற்ற, பழனிசாமி அறிவித்த மாவட்ட நிர்வாகிகள் யாரும் வரவில்லை என புகார் எழுந்து உள்ளது. இது குறித்து, மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, இடைத்தேர்தல் அறிவித்ததும், தாராபுரம் தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, திருப்பூர், சேலம், கோவை, ஈரோடு, கரூர் என கொங்கு மண்டல கட்சி நிர்வாகிகளை, பழனிசாமி நியமித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதிக்கு தலைமை பொறுப்பாளராக, கட்சியின் பொருளாளர் சீனிவாசனை நியமித்தாலும், பழனிசாமியின் நேரடி கண்காணிப்பில் தேர்தல் பணிகள் நடக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக, துணை பொதுச்செயலர் முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மதுராந்தகத்துக்கு, கட்சியின் 33 அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முனுசாமியின் சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை தவிர, மற்ற மாவட்ட நிர்வாகிகள் யாருமே வரவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பக்கத்து மாவட்டங்களின் மாவட்ட செயலர்கள் கூட, மதுராந்தகத்தை எட்டிப் பார்க்கவில்லை. போன் செய்து அழைத்தால், நாளை வருகிறோம்; கொஞ்சம் வேலை இருக்கு... முடிச்சுட்டு வாரோம் என இழுத்தடிக்கின்றனர். வார இறுதியில், மதுராந்தகம் வந்த ஒரு சில நிர்வாகிகளும், ஒருங்கிணைப்பு இல்லாததால், தங்கி இருந்த ஹோட்டல் ரூமை விட்டு வெளியே வரவில்லை. ஏற்கனவே, இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பா.ம.க., ஆதரவு அளிக்கவில்லை. பழனிசாமி உத்தரவிட்டும், அ.தி.மு.க., நிர்வாகிகள் பாராமுகமாக இருக்கின்றனர். இதனால் பழனிசாமி அதிர்ச்சியடைந்து உள்ளார் என்கின்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள். Dinamalar #AIADMK #EdappadiPalaniswami #EPS #Madurantakam #TamilNaduPolitics #TNPolitics #ElectionsTN #CampaignSetback #PoliticalNews #TamilNaduNews #AIADMKNews
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelயார் மீது தவறு? பஸ்சை ஸ்கூட்டர் நெருங்க... வாக்குவாதத்தில் சண்டை பெருக!

தமிழகம் • 11-Sep-2026