புதுச்சேரி பாக்கமுடையான் பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஆனந்த், வயது 28. இன்று மதியம் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கிருஷ்ணாநகர் அருகே ஸ்கூட்டரில் போனார். அப்போது அவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் இதனை கண்டு லாஸ்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த லாஸ்பேட்டை போலீசார், ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் முதற்கட்ட விசாரணையில், ரவுடி ஆனந்துக்கும், லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான சந்துருவுக்கும் இடையே ஏரியாவில் யார் பெரிய ஆள் என்பதில் போட்டி இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சந்துரு மற்றும் அவரது கூட்டாளிகள், ஆனந்தை சில நாட்களாக நோட்டமிட்டு வந்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஸ்கூட்டர் மீது மோதிய தனியார் பேருந்து! பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கிரிக்கெட் • 1 hour(s) ago