சிவகங்கை கொடிக்காடு கண்மாய் இரண்டு இளைஞர்கலை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடுகின்றனர். இந்த நிலையில் இளைஞர்கள் சாவுக்கு நீதி கேட்டு மதுரை-தொண்டி நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் சமாதானம் பேசியும் மறியல் கைவிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஇறுதி முடிவு CM கையில்!
அக்கம் பக்கம் • 1 hour(s) ago