சட்டசபையில் மிசா கைது குறித்த முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், மிசா கைதின்போது சிறையில் தமக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் தவெகவின் ஐடி விங் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் திமுகவையும் அக்கட்சி தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து இருந்தது. இந்நிலையில், தவெகவுக்கு திமுகவின் ஐடி விங் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது. அதன் விவரம் வரலாறு அல்லது தியாகத்தின் அர்த்தம் தெரியாமல் சமூக ஊடகங்களில் பொய்களையும், அவதூறுகளையும் கூறி வசைபாடும் குண்டர்களால் தவெக கட்சி நடத்தப்படுகிறது தன் தந்தையின் கருணையால் மட்டுமே சினிமாவில் வளர்ந்து, சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்தவருக்கு போலீஸ் பூட்ஸ்களால் மிதிப்பட்டு மிசா கைதிகள் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படி தெரியும் ? மிசா தியாகம் என்பது ஒரு பருத்தி மெத்தையில் உருண்டுகொண்டு திரைப்படத்தில் நடிப்பதை போன்றதல்ல. சிறையின் இரும்பு கம்பிகளுக்கு இடையே ரத்தம் சிந்தும்போதும் சித்தாந்த உறுதியில் இருந்து சற்றும் தளராமல் இருப்பதே ஆகும் இந்த மாநிலத்தின் உண்மையான தியாகிகளை உடல் ரீதியாக இழிவுபடுத்தி, கேலி செய்ய முயன்றாலும் மக்களுக்கு உண்மை தெரியும். அவர்கள் உங்கள் போலி மக்கள் தொடர்பு மாஃபியா-வை குழி தோண்டி புதைப்பார்கள் என்று திமுக ஐடி விங் கூறியுள்ளது. #Tvk #Dmk #MK_stalin #CMVijay #MISA #DMK_ITwing #TNassembly #Assemblyspeech #Dmk_reply_to_tvk #TVK_IT_wing #TNpolitics #Politicalnews #Politicalupdates #Tamilnadunews #currentaffairs
subramanian12-Sep-2026
திமுக தீய சக்தி. தமிழ்நாட்டை பிடித்த விஷ கிருமி..
Ramanujam Veraswamy12-Sep-2026
Still DMK and Mr.Stalin refuse to admit that corruption by Stalin, his family members snd close associates is the only reason for their rout in 2026 elections, despite money power. Stalin MISA attack is mainly due to personal enemity and vengeance of Vidyasagar, Superintendent of Central Prisons, Madras wirth Karunanidhi, over denial of promotion of Vidyasagar to the post of DIG of Prisons.
Ramanujam Veraswamy11-Sep-2026
Still Stalin is not prepared to admit corruption in his regime and claims innocent. Shame.
Ramanujam Veraswamy11-Sep-2026
Stalin attack in Central Prison, Madras was mainly due to vengeance nourished by Vidyasagar, then Superintendent of Central Prisons, Chennai on Mr.Karunanidhi, who was also CM, just before - as Karunanidhi spoiled the promotion of Vidyasagar to the rank of DIG, Prisons. Justice Ismail Commission has brought out these aspects in details in its report.
புதுச்சேரி • 54 minutes ago