விஜயதசமி நாளான இன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். ஆண்டு தோறும் தினமலர் மாணவர் பட்டம் சார்பில் வித்யாரம்பம் துவக்கத்துக்கு உகந்த நாளான விஜயதசமி திருநாளில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு தினமலர் மாணவர் பதிப்பு மற்றும் மஹன்யாஸ் மகளிர் மனதில் இணைந்து இரண்டரை முதல் மூன்றரை வயது குழந்தைகளுக்கான அனா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று காலை 8.50 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. பூஜைக்குரிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து அரிச்சுவடியில் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர் அவர்களுக்கு தேவையான பூஜைப் பொருட்கள் தாம்பூலம், பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், வெத்தலை பாக்கு என அனைத்தும் தினமலர் மற்றும் மஹன்யாஸ் சார்பில் வழங்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்து குழந்தைகளின் ஆள்காட்டி விரலை பிடித்து, தாம்பூல தட்டில் நிரப்பியிருந்த பச்சரிசியில் முதலில் ஓம் அடுத்து அ என எழுதி குழந்தைகளின் கற்றலை இனிதே துவங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை ஸ்பான்சராக அம்மன் உயர்தர சைவ உணவகம், கோ ஸ்பான்சர்ஸ் ஆக ஆனந்தா அண்ட் ஆனந்தா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி, ஸ்ரீநர்சிங் ஸ்வீட்ஸ் லிமிடெட், கார்த்திகா அண்ட் கோ அரிசி மற்றும் மளிகை மொத்த வியாபாரம், டாம்ஸ் பென்சில் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தினமலர் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கோயம்புத்தூர் • 2 minutes ago
திருப்பூர் • 2 minutes ago

மதுரை • 20-Oct-2026
Reelகடலின் ஆக்ரோஷம்! வீடுகளுக்குள் புகுந்த அலைகள்!

மதுரை • 11-Oct-2026