நீலகிரி மாவட்டம் கூடலூர் லாரஸ்டன் பகுதியில் புலி தாக்கி பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் 160 தானியங்க கேமிராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. புலியை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் புலியை சுட்டுப் பிடிக்க வலியுறுத்தி அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். கூடலூர், பந்தலூர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இன்று முதல் 48 மணி நேரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகனங்கள், தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது. கோழிக்கோடு சாலை, துப்புகுட்டிபேட்டை பகுதியில் கேரளாவிலிருந்து வந்த சுற்றுலா வாகனங்களை போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஸ்பாட்டுக்கு விரைந்த போலீசார், வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது, என எச்சரித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
செய்தி எதிரொலி • 29-Jul-2026