அய்யன்கொல்லி ஸ்ரீசரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி களைகட்டியது | School Opening | Childrens Happy | Ayyankolli | Nilgiris நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வித்யா பிரவேஷ் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் ரேணுகா வரவேற்றார். பிரேமா இறை வாழ்த்து பாடினார். மாணவி சண்ட்ரியா வரவேற்பு நடனமாடினார். விழாவிற்கு தலைமை வகித்து தாளாளர் மனோஜ்குமார் பேசினார். மேலும் அவர் கூறுகையில், மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை வெறும் கல்விக்கூடமாக கருதாமல், தங்களின் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் கோயிலாக கருத வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம், பணிவு, இறை வழிபாடு போன்றவற்றை கற்றுக் கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் தங்கள் தாய் நாட்டின் மீது அன்பு கொண்ட சிறந்த குடிமகன்களாக உருவாக முடியும். அதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசி வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார். தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். முதல்வர் அன்பரசி தனராஜ் முன்னிலை வகித்து பேசினார். சுவாமி ஓம்காரனந்தா, பள்ளி பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் ஆசி வழங்கி பேசுகையில், மாணவர்கள் எப்போதும் அன்பு நிறைந்தவர்களாகவும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், மாணவர்கள் ஏற்றத்தாழ்வு, மற்றவர்களை புறக்கணிப்பது போன்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும். மனிதர்களை, மனிதனாக மதித்து தங்கள் வாழ்வில் உயர மாணவர்கள் முன் வர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பிரபு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் பள்ளி முதல்வர் அன்பரசி தனராஜ் தலைமையில் வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆசிரியர் பாக்கியலீலா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

டீ கடை பெஞ்ச் • 1 minute ago