வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக, இன்றும் நாளையும் பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசின் பேரிடர் அபாய குறைப்பு முகமை வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் உருவாகி உள்ள, முரசு புயலால், அடுத்த சில நாட்களுக்கு, வடக்கு தமிழகத்தில் கனமழை பெய்வதுடன், பலத்த சூறைக்காற்றும் வீசும். கடல் கொந்தளிப்பாகவே காணப்படும். ஆனாலும், பதற்றம் தேவையில்லை. நாளை மறுதினம், 4ம் தேதி காலை வரை, வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். அலைகள், 4 முதல் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பக் கூடும். எனவே, 4ம் தேதி காலை வரை, இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இந்நாட்களில் கடற்கரை அல்லது கடலோர சாலைகளுக்கு செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பூர் • 7 minutes ago