இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் தொகுதியின் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இவர், ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது. மீண்டும் அவரையே தவெக நிறுத்தி உள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 2 நாட்களாக பிரசாரம் செய்து வரும் மரகதத்திற்கு ஆங்காங்கே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று, வீராணக்குண்ணம் கிராமத்தில் ஓட்டு சேகரிக்க சென்றபோது, மக்கள் உள்ளே விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தனர். அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு நன்றி சொல்லக்கூட தொகுதி பக்கம் வரவில்லை என்றார். 2021 தேர்தலில் வென்றபோதும், தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்றும் ஒரு தரப்பினர் ஆதங்கத்தை கொட்டினர். அவர்களுக்கும், தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் எம்எல்ஏ நிதி முழுமையாக வழங்கவில்லை எனக்கூறி சமாளித்த வேட்பாளர் மரகதம் அங்கிருந்து சென்றார். வேட்பாளர் பிரசாரத்தில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. #Tvk #TamilnaduPolitics #TvkGovt #TNCMVijay #ByeElection #MaduranthagamConstituency #Election #Campaign #Public #TvkCandidate #VoteForChange #PoliticalAwareness #Election2023 #LocalPolitics #DemocracyInAction #GrassrootsCampaign #StateElections #PolicyMaking #VoterEngagement #ElectoralValues
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகளைகட்டிய விநாயகர் ஊர்வலம்!
கிருஷ்ணகிரி • 2 minutes ago