திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ விழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவின் 2-ம் நாள் பிரசன்ன வெங்கடாஜலபதி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்ப தீபாராதனைக்குப் பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 22-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel15 நிமிடங்கள் எனக்காக காத்திருந்த அம்பாள்
சிவகங்கை • 12-Sep-2026